17-ஏ ரக போர் கப்பல் அறிமுக விழா மேற்குவங்கத்தில் உள்ள கப்பல் கட்டுமானத்தளத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் எல்லைப் பிரச்னை குறித்து பேசினார்.
அதில், இந்தியாவின் வடக்கு எல்லையில் அத்துமீறலில் ஈடுபட்டு ஆக்கிரமிப்பு செய்ய சீனா முயற்சி செய்தது. கோவிட்-19 பெருந்தொற்று காலத்தை பயன்படுத்தி இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டாலும் நாட்டின் ராணுவ வீரர்கள் அதை உறுதியுடன் எதிர்கொண்டு முறியடித்தனர்.