வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, தொழிலதிபர் கெளதம் அதானி மீது ஊழல், பெகாசஸ் ஸ்பைவேர் தொடர்பாக இந்திய-அமெரிக்க மருத்துவர் ஒருவர் கொலம்பியாவில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக மூன்று பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடி, தொழிலதிபர் அதானி மீது அமெரிக்காவில் வழக்கு
பிரதமர் மோடி, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, தொழிலதிபர் கெளதம் அதானி மீது ஊழல் மற்றும் பெகாசஸ் ஸ்பைவேர் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Etv Bharatபிரதமர் மோடி மற்றும் அதானி மீது ஊழல் வழக்கு தொடுத்த இந்திய -அமெரிக்க மருத்துவர்
இதுகுறித்து நியூயார்க்கைச் சேர்ந்த பிரபல இந்திய-அமெரிக்க வழக்கறிஞர் ரவி பாத்ரா கூறுகையில், "இது ஒரு இறந்த வழக்கு. ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட அமெரிக்க வாழ் இந்திய மருத்துவர் லோகேஷ் என்பவர் மே 24ஆம் தேதி வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கில் எந்தவொரு ஆவண ஆதாரங்களும் இல்லை. இருப்பினும் சம்பந்தப்பட்டோருக்கு சம்மன் அனுப்பட்டது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:அமெரிக்க ஆலோசனைக் குழுவில் 2 இந்திய வம்சாவளியினர்
Last Updated : Sep 2, 2022, 6:06 AM IST