தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

’டவ் தே’ புயல் மீட்புப் பணி: குஜராத் விரைந்த 3 இந்திய விமானப் படை விமானங்கள்

டவ் தே புயல் முன்னெச்சரிக்கை, மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக மூன்று இந்திய விமானப்படை விமானங்களில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்குச் சென்றுள்ளனர்.

Indian Air Force in Dow-Te storm relief operation
Indian Air Force in Dow-Te storm relief operation

By

Published : May 17, 2021, 5:28 PM IST

அரபிக்கடலில் உருவான டவ் தே புயல் உச்ச உயர் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்தப் புயல் குஜராத் மாநிலத்தின் போர்பந்தருக்கும் மஹுவாவுக்கும் இடையே இன்று மாலை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப்புயலை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், புயல் நிவாரணப் பணிகளை செய்ய மூன்று இந்திய விமானப் படை விமானங்கள் குஜராத் மாநிலம், அகமதாபாத்திற்கு சென்றுள்ளன. அதன்படி கொல்கத்தாவில் இருந்து சென்ற விமானத்தில், 167 பேரிடர் மேலாண்மைக் குழுவினர் 16.5 டன் அளவிலான பொருள்களை ஏற்றிச் சென்றுள்ளனர்.

அகமதாபாத்திற்கு விரைந்த மீட்புப் படையினர்

ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் இருந்து சென்று விமானத்தில், 121 பேரிடர் மேலாண்மைக் குழுவினர், மீட்புப் பணிகளுக்குத் தேவையான உபகரணங்கள் உள்ளிட்ட 11.6 டன் அளவிலான பொருள்களை ஏற்றிச் சென்றுள்ளனர்.

தேசியப் பேரிடர் மேலாண்மைக் குழுவினர்

மேலும், புனேவிலிருந்து 110 மீட்புப் படையினரையும், 15 டன் அளவிலான பொருள்களையும் ஏற்றிக்கொண்டு இந்திய விமானப் படை விமானம் அகமதாபாத் சென்றுள்ளது.

இதையும் படிங்க:குஜராத்திலிருந்து 280 கி.மீ தொலைவில் டவ்-தே புயல்; 1.50 லட்சம் பேர் வெளியேற்றம்!

ABOUT THE AUTHOR

...view details