டெல்லி:பிரிட்டிஸ் ராயல் விமானப் படையின் ஓர் அங்கமாக 1932ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி இந்திய விமானப்படை தோற்றுவிக்கப்பட்டது. 1947ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பிறகு, ஆங்கிலேயே அரசுக்கு கீழ் விமானப்படை செயல்பட்டுவந்தது.
அதன்பிறகு 1950ஆம் ஆண்டு இந்தியாவுக்கென தனி அரசியல் அமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு குடியரசு நாடாக மாறிய பின்னர், ராயல் இந்திய விமானப்படை என்ற பெயர் இந்திய விமானப் படை என்றானது.
விமானப்படை தோற்றுவிக்கப்பட்ட அக்டோர் 8ஆம் தேதி ஆண்டுதோறும் விமானப்படை நாளாக இந்திய அரசால் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி விமானப்படை வீரர்களுக்கு விமானப்படை நாளையொட்டி நாட்டைப் பாதுகாப்பதிலும், சவாலான நேரங்களில் மனிதாபிமான உணர்வை வெளிப்படுத்துவதிலும் விமானப்படை வீரர்கள் சிறப்பாகச் செயலாற்றுகின்றனர் என்று பிரதமர் மோடி விமானப்படை வீரர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய உள் துறை அமைச்சர், "இந்திய விமானப்படை நாளில், நாட்டிற்குத் தன்னலமின்றி சேவை செய்ததற்காகவும், அதன் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காகவும், எங்கள் துணிச்சலான விமான வீரர்களை நாங்கள் வாழ்த்துகிறோம். எங்கள் வீரமிக்க விமானப் படையின் புகழ்பெற்ற வரலாற்றை எண்ணி நாங்கள் பெருமைப்படுகிறோம்" என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்," விமானப் படையில் பணியாற்றும் வீரர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு விமானப்படை நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பலவிதமான சவால்களில் தேசத்திற்காகப் பணியாற்ற விமானப்படை வீரர்களை எண்ணிப் பெருமைகொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:சூலூர் விமானப்படை தளத்தில் போர் விமான சாகச நிகழ்ச்சி