பரிதாபாத் :அரியானா மாநிலம் பரிதாபாத்தில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் விழாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர், எல்லை காரியங்களும் நன்றாக சென்றால், 2028ஆம் ஆண்டு இந்தியா தனக்கென தனி விண்வெளி மையத்தை கொண்டு இருக்கும்.
2028ஆம் ஆண்டுக்குள் விண்வெளி மையத்தின் தொகுதியை உருவாக்குவது, பரிசோதனை மேற்கொள்வது மற்றும் விண்ணில் செலுத்துவது உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாக சோம்நாத் தெரிவித்தார். 2035ஆம் ஆண்டுக்கு விண்வெளி மையத்திற்கான அனைத்து பணிகளையும் திட்டமிட்டபடி செய்து முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக இஸ்ரோ தலைவர் கூறினார்.
குறிப்பாக 2035ஆம் ஆண்டுக்குள் பாரதிய விண்வெளி மையத்தை நிறுவ பிரதமர் மோடி திட்டமிட்டு உள்ளதாக குறிப்பிட்டார். அதேபோல் 2024ஆம் ஆண்டுக்குள் நிலவில் இந்திய விண்வெளி வீரர்களை தரையிறக்கும் திட்டம் குறித்து முன்னர் பிரதமர் மோடி குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.