தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா இல்லாத நாடாக இந்தியா மாறும்:மத்திய அமைச்சர் அஸ்வினி சவுபே - கோவாக்சின் தடுப்பூசிக்கும் அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதி

டெல்லி: கரோனா தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்துள்ள நிலையில், கரோனா இல்லாத நாடாக இந்தியா மாறும் என சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினி சவுபே தெரிவித்துள்ளார்.

BJP leader
BJP leader

By

Published : Jan 3, 2021, 6:17 PM IST

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா மற்றும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் இணைந்து தயாரித்த கோவிஷீல்ட் தடுப்பூசிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இணைந்து தயாரித்த கோவாக்சின் தடுப்பூசிக்கும் அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதியை இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு இன்று வழங்கியுள்ளது.

இதுகுறித்து பேசிய மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினி சவுபே, " இது நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய சாதனையாகும். இந்த நேரத்தில் நாட்டு மக்களுக்கும், விஞ்ஞானிகள், சுகாதாரப் பணியாளர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடி தலைமையில் கரோனாவிற்கு எதிரான போரில் இது ஒரு முக்கிய சாதனை. கரோனா இல்லாத நாடாக இந்தியா மாறும்” என்றார்.

முன்னதாக கடந்த டிசம்பர் 28ஆம் தேதி அமைச்சர் அஸ்வினி சவுபே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் மருத்துவர்களின் ஆலோசனையின்படி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:கரோனா தடுப்பூசிக்கு இந்தியா அனுமதி... உலக சுகாதார அமைப்பு பாராட்டு!

ABOUT THE AUTHOR

...view details