தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

2021க்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி உறுதி - ஹர்ஷ் வர்தன்

இந்தாண்டு இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

ஹர்ஷ்
ஹர்ஷ்

By

Published : May 22, 2021, 11:21 AM IST

டெல்லி: வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர்கள், முதன்மை செயலாளர்கள் உள்ளிட்டோருடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கலந்துரையாடல் நடத்தினார்.

அப்போது அவர் பேசும்போது, ‘2021 ஜூலை மாத இறுதிக்குள் இந்தியா 51 கோடி தடுப்பூசி டோஸ்கள் கொள்முதல் செய்யும். ஆகஸ்டு முதல் டிசம்பர் இறுதிக்குள் 216 கோடி தடுப்பூசி டோஸ்கள் வாங்கப்படும். இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் 267 கோடி டோஸ்கள் மூலம் இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் குறைந்தபட்சம் அனைத்து பெரியவர்களுக்குமாவது (18 வயதுக்கு மேற்பட்டோர்) தடுப்பூசி போடப்படும்’ என்று தெரிவித்தார்.

இந்தியாவில் கரோனா பரிசோதனை எண்ணிக்கை நாளொன்றுக்கு 25 லட்சம் என்ற அளவுக்கு அதிகரித்திருப்பதாக தெரிவித்த அமைச்சர், இந்தியாவில் 18 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்துப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details