டெல்லி:இந்தியாவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அனைவருக்கும் தடுப்பூசிப் போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தடுப்பூசிச் செலுத்தும் பணிகள் 2020 டிசம்பர் மாதம் தொடங்கிய நிலையில், இந்தியாவில் 2021 ஜனவரி 16ஆம் தேதி தொடங்கப்பட்டது.
வேகம் எடுத்துள்ள தடுப்பூசித் திட்டம்
அமெரிக்காவில் இதுவரை 32.33 கோடி டோஸ் தடுப்பூசி மருந்துகள் செலுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தியா 32.36 கோடி டோஸ்கள் செலுத்தி அமெரிக்காவை முந்தி புதிய சாதனைப் படைத்துள்ளது.
இதுதொடர்பாக பிரதமர் மோடி ட்விட்டரில், "இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமெடுத்துள்ளன. இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் பாராட்டுகள். எங்களது நோக்கம் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதுவே; அதுவும் இலவசமாக செலுத்துவது என்பதுவே" எனப் பதிவிட்டுள்ளார்.
பிரதமரின் ட்விட்டர் பதிவு இதையும் படிங்க:தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையில் அமெரிக்காவைத் தாண்டிய இந்தியா