தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவின் 15-ஆவது குடியரசு தலைவர் யார்? இன்று வாக்குப்பதிவு ... - தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரெளபதி முர்மு

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

இந்தியாவின் 15ஆவது ஜனாதிபதி யார்? இன்று தேர்தல்...
இந்தியாவின் 15ஆவது ஜனாதிபதி யார்? இன்று தேர்தல்...

By

Published : Jul 18, 2022, 9:50 AM IST

டெல்லி:இந்திய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் இன்று (ஜூலை18) நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் பங்கேற்கின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரெளபதி முர்மு போட்டியிடுகிறார். அனைத்து எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார்.

பாராளுமன்றத்தின் இரு அவை உறுப்பினர்கள் மற்றும் அனைத்து மாநிலங்களின் சட்டமன்றங்கள் மற்றும் டெல்லி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் வாக்களிப்பர். அனைத்து மாநிலத்தின் சட்டமன்றத்திலும், டெல்லி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் தேர்தல் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும்.

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்கள் விருப்பப்படி வாக்களிக்கலாம். எந்த கட்சிக்கும் வாக்காளர்களை நிர்பந்திக்க உரிமையில்லை. தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள கால அட்டவணையின்படி ஜூலை 21-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும், ஜூலை 25-ம் தேதி புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜூலை 24-ம் தேதி ராம்நாத் கோவிந்த் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தயார் நிலையில் உள்ளது.

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள தேர்தலில் 234 சட்டப்பேரவை உறுப்பினர்கள், கணேசமூர்த்தி, செல்வராஜ், கார்த்தி சிதம்பரம் ஆகிய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் வாக்களிக்கவுள்ளனர்.

வாக்குப்பதிவு முன்னேற்பாடுகள் தொடர்பாக தமிழக தேர்தல் பார்வையாளர் புவனேஷ்குமார் ஆய்வு செய்தார். அப்போது, சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:குடியரசுத் தலைவர் தேர்தல் - தமிழ்நாட்டில் ஏற்பாடுகள் தீவிரம்

ABOUT THE AUTHOR

...view details