டெல்லி:தாய்லாந்தின் பாங்காக்கை தலைமையிடமாகக் கொண்ட ஆசியான்-பசிபிக் அஞ்சல் ஒன்றியத்தின் (APPU) தலைமைப் பொறுப்பை இந்தியா இம்மாதத்தில் ஏற்றுக்கொள்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை பாங்காங்கில் நடைபெற்ற 13ஆவது ஆசியான்-பசிபிக் அஞ்சல் ஒன்றிய மாநாட்டில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, அஞ்சலக சேவைகள் வாரியத்தின் முன்னாள் உறுப்பினர் வினயா பிரகாஷ் சிங் ஒன்றியத்தின் தலைமை செயலாளராக 4 ஆண்டுகளுக்கு பொறுப்பு வகிக்க உள்ளார்.
இதுகுறித்து பிரகாஷ் சிங் கூறுகையில், அஞ்சல் ஒன்றியத்தின் மூலம் வணிக வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும், ஒன்றியத்தின் நீடித்த நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும், மறுசீரமைப்பதற்கும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள அஞ்சல் துறைகளுடன் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதே எனது குறிக்கோள் என்றார்.