தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சர்வதேச பயணிகள் விமான சேவை டிசம்பர் 15 முதல் தொடக்கம் - சர்வதேச பயணிகள் விமான சேவை

இந்தியாவில் இருந்து சர்வதேச பயணிகள் விமான சேவையை டிசம்பர் 15 முதல் தொடங்கலாம் என்று போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

international passenger services, பயணிகள் விமான சேவை
பயணிகள் விமான சேவை

By

Published : Nov 26, 2021, 6:00 PM IST

Updated : Nov 26, 2021, 6:32 PM IST

டெல்லி: இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கான பயணிகள் விமான சேவையை டிசம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கலாம். மூன்று வகையாக பயணிகள் சேவை பிரிக்கப்பட்டு, அதற்கேற்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கோவிட்-19 பரவல் காரணமாக 2020ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி முதல் சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடை நவம்பா் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதனிடையே, சா்வதேச விமான சேவைகள் விரைவில் தொடங்கப்படும் என்று விமானப் போக்குவரத்துத் துறைச் செயலா் ராஜீவ் பன்சால் தெரிவித்தார். அத்துடன் பல்வேறு நாடுகளிடையே சில நிபந்தனைகளைப் பின்பற்றி விமானங்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் இன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:வெளிநாட்டு விமானப் போக்குவரத்துக்கு தொடரும் தடை

Last Updated : Nov 26, 2021, 6:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details