தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஐந்து ஆண்டுகளில் 100 கோடி கைப்பேசிகள், 5 கோடி மடிக்கணினிகள் தயாரிக்க திட்டம் - மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்

இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 100 கோடி கைப்பேசிகள், 5 கோடி மடிக்கணினிகள் தயாரிக்கப்படவுள்ளதாக, மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்
மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்

By

Published : Dec 15, 2020, 10:22 PM IST

டெல்லி:நாடு முழுவதும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 100 கோடி கைப்பேசிகள், 5 கோடி தொலைக்காட்சி பெட்டிகள், 5 கோடி மடிக்கணினிகள், டேப்லெட் ஆகியவை தயாரிக்கப்படவுள்ளதாக, மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், " இந்தியாவில் 5-ஜி சேவைக்கான சோதனையோட்டம் விரைவில் தொடங்கும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும், மடிக்கணினி, டேப்லெட் உள்ளிட்ட ஐந்து கோடி ஐடி சாதனங்கள், 5 கோடி தொலைக்காட்சி பெட்டிகள், 100 கோடி கைப்பேசிகள் தயாரிக்கப்படவுள்ளன.

நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் என்ற இலக்கை எட்டும். உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் நாட்டின் உற்பத்தியை முன்னேற்றம் அடைய செய்ய வேண்டும் என்பதே நமது இலக்கு" என்றார்.

மின்னணு சாதனங்களின் உற்பத்தியால் உலக சந்தையில் இந்தியாவின் பங்கு 26 சதவிகிதமாக உயரும் என ஐசிஇஏ, ஈஒய் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பள்ளி பாடத்திட்டத்தில் இசை, நடனம் - குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு

ABOUT THE AUTHOR

...view details