சூரிய மின்சக்தி மூலம், மின்னாற்பகுப்பு முறையில், தண்ணீரில் உள்ள ஆக்சிஜன், ஹைட்ரஜனை பிரித்து ஹைட்ரஜன் உற்பத்தி செய்வதுதான் பசுமை ஹைட்ரஜன். இந்த பசுமை ஹைட்ரஜன் முயற்சிகள் குறித்த இரண்டு நாள் உச்சிமாநாட்டை பிரிக்ஸ் நாடுகளுடன் இணைந்து, இந்தியா காணொலி மூலம் ஆலோசனை நடத்தயுள்ளது.
இந்த நிகழ்ச்சி, பசுமை ஹைட்ரஜன் முயற்சிகள் குறித்த கருத்துக்களை அடுத்த கட்டத்துக்கு எப்படி கொண்டு செல்வது என்பது குறித்து பகிர்ந்து கொள்ளப்படும். காணொலி காட்சி மூலம் நடைப்பெறும் இந்த உச்சிமாநாடு நாளை மறுநாள் (ஜூன் 23) ஆம் தேதி நடைபெறயுள்ளது.
இந்நிகழ்ச்சியை மின் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மகாரத்னா பொதுத்துறை நிறுவனமான என்டிபிசி (தேசிய அனல் மின் நிறுவனம்) நடத்துகிறது. இதில் பிரிக்ஸ் நாடுகளின் நிபுணர்கள் கலந்து கொண்டு எதிர்காலத்தில் எரிசக்தியில் ஹைட்ரஜனை கலப்பது குறித்து ஆலோசனை கூறுவார்கள்.
அதுமட்டுமல்லாமல், பசுமை ஹைட்ரஜனை பல வகைகளில் பயன்படுத்தலாம். அம்மோனியா, மெத்தனால் போன்ற பசுமை ரசாயணங்களை, உரங்கள், மின்சாரம், இயக்கம், கப்பல் போக்குவரத்து போன்றவற்றில் பயன்படுத்த முடியும். இதன் மூலம், எஃகு, சிமெண்ட் துறையில், பசுமை ஹைட்ரஜன் பயன்பாட்டை அதிகரிப்பது குறித்தும் ஆய்வு செய்யப்படவுள்ளன என்பதும் குறிப்பிடப்பிடதக்கது.
இதையும் படிங்க: புதுச்சேரிக்கு கனவு திட்டத்தைத் தயாரித்துள்ளேன்: தமிழிசை