டெல்லி:இது தொடர்பாக ஒன்றிய உள் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள குறிப்பில், "கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் முதல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விசா அளிப்பது நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. மேலும், பன்னாட்டுப் பயணிகளின் வருகைக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
தற்போது, வெளிநாட்டுப் பயணிகள் வருகைக்குப் புதிய விசாக்களை வழங்க அரசு முடிவுசெய்துள்ளது. அதன்படி, தனி விமானங்களில் வருவோருக்கு வரும் 15ஆம் தேதி முதலும், வழக்கமான விமானங்களில் வருவோருக்கு நவம்பர் 15ஆம் தேதி முதலும் விசா அனுமதி வழங்கப்படும்.