தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாட்டில் கரோனா பரிசோதனை எண்ணிக்கை 50 கோடியைக் கடந்தது - 50 கோடி பேருக்கு கரோனா பரிசோதனை

இந்தியா முழுவதும் இதுவரை 50 கோடி பேருக்கு கரோனா தொற்று சோதனை செய்யப்பட்டுள்ளதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

50 cr Indians for COVID-19 tests
50 cr Indians for COVID-19 tests

By

Published : Aug 19, 2021, 10:53 AM IST

டெல்லி:இந்தியாவில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை படிப்படியாக குறைந்துவருகிறது. இதற்கு, கரோனா தடுப்பூசி செலுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவது ஒரு முக்கியக் காரணமாகும்.

கரோனா தடுப்பசி குறித்து ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின உரையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் இதுவரை 55 கோடியே 47 லட்சத்து 30 ஆயிரத்து 609 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த நிலையில்,இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்) இன்று (ஆகஸ்ட் 19) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "நாடு முழுவதும் ஆகஸ்ட் மாதம் மட்டும் நாளொன்றுக்கு 17 லட்சத்துக்கும் அதிகமான கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

அப்படி இதுவரை மொத்தமாக 50 கோடி கரோனா பரிசோதனை மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கடந்த 55 நாள்களில் மட்டும் 10 கோடி சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இது ஒரு மைல்கல் நிகழ்வாகும்.

இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க, நாடு முழுவதும் கரோனா பரிசோதனை உள்கட்டமைப்புகளை ஐசிஎம்ஆர் விரிவுபடுத்தி வருகிறது.

புதிய நோய் கருவிகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது. மக்களை எளிதில் சென்றடையும் வகையில், பரிசோதனை மையங்கள் அமைக்கப்படுகின்றன. இதனால், தொற்றுப் பரவலை முன்கூட்டியே அறிந்து கட்டுப்படுத்த முடியும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கரோனா பாதிப்பு: இந்தியாவில் ஒரே நாளில் 440 பேர் பலி

ABOUT THE AUTHOR

...view details