டெல்லி: கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுட்டுக் கொல்லப்பட்டார். ஹர்தீப் கொலை வழக்கில் இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதற்கு இந்தியா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழ்நிலை நிலவத் தொடங்கியது.
இதனையடுத்து மறுஉத்தரவு வரும் வரை விசா வழங்குவதை நிறுத்துவதற்கான முடிவை இந்திய அரசு அறிவித்துள்ளது. விசா குறித்த விபரங்கள் BLS இன்டர்நேஷனல் இணையதளத்தின் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் மக்கள்தொகையில் சுமார் 2 சதவீதம் இருக்கும் மத சிறுபான்மையினரான சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டும் என 1980களில் பஞ்சாப் மாநிலத்தில் பிரிவினை கோரிக்கையினால் பல வன்முறை தாக்குதல்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. அதனை இந்திய அரசு கட்டுக்குள் கொண்டு வந்தது. அதன் பின் தற்போது சமீபத்தில் இந்த பிரச்னை மீண்டு தீவிரமடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சீக்கிய சுதந்திரத்திற்கான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜீன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டை இந்திய அரசு மறுப்பு தெரிவித்தது.