டெல்லி:சுமார் ஐந்தாயிரம் கி.மீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கக் கூடிய ஆற்றல் கொண்ட அக்னி-5 ஏவுகணையை (டி.ஆர்.டீ.ஓ) இந்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு நேற்று (அக்டோபர் 27) வெற்றிகரமாகச் சோதனை செய்தது.
அப்துல்கலாம் தீவில் சோதனை
ஏவுகணை சோதனையை ஒடிசாவில் உள்ள அப்துல்கலாம் தீவில் நடைபெற்றதாக ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.நிலத்திலிருந்து ஏவக்கூடிய இந்த ஏவுகணை நிலத்தில் உள்ள இலக்கை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்டது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.