தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சட்ட நடவடிக்கைகளை அச்சுறுத்தல் என்று கூறுவதா? - ஐ.நா. மீது மத்திய அரசு பாய்ச்சல்! - சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட்

ஐநா மனித உரிமை பணிக்குழுவின் கருத்து இந்தியாவின் சுதந்திரமான நீதித்துறை அமைப்பில் தலையிடுவதாகும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

India slams
India slams

By

Published : Jun 29, 2022, 7:05 PM IST

டெல்லி: கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்தது. போலி ஆதாரங்களை வைத்து இந்த வழக்கை தொடர்ந்ததாக, முன்னாள் டி.ஜி.பி ஆர்.பி.ஸ்ரீகுமார், மும்பையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் கைது செய்யப்பட்டதற்கு இந்தியாவின் மனித உரிமைகள் ஆணையம் மற்றும் ஐ.நா.வின் மனித உரிமை பணிக்குழு கண்டனம் தெரிவித்திருந்தது. இந்திய அரசு மனித உரிமை ஆர்வலர்களை குறிவைத்து அச்சுறுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும், உரிமைகளுக்காகப் போராடும் அமைப்புகளுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கையை ஏற்க முடியாது என்றும் ஐ.நா. தெரிவித்திருந்தது. மேலும், அவர்கள் இருவரையும் விடுவிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியது.

இதுதொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, "டீஸ்டா செடல்வாட் கைது தொடர்பாக ஐ.நா. மனித உரிமை பணிக்குழு கூறியுள்ள கருத்து தேவையற்றது மட்டுமல்ல, இந்தியாவின் சுதந்திரமான நீதித்துறை அமைப்பில் தலையிடுவதாகும். சட்ட விதிமீறல்கள் மீது எடுக்கப்படும் இதுபோன்ற சட்டரீதியான நடவடிக்கைகளை அச்சுறுத்தல் என்று ஐ.நா. முத்திரை குத்துவதை ஏற்க முடியாது" என்று கூறினார்.

இதையும் படிங்க: உதய்பூர் கொலை வழக்க விசாரிக்க NIA நியமனம் - உள்துறை அமைச்சகம் உத்தரவு!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details