தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

328 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை செலுத்திய பெருமை இந்தியாவுக்கு கிடைக்கவுள்ளது - இஸ்ரோ - இஸ்ரோ மூத்த அலுவலர்

சென்னை: 328 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திய பெருமை இந்தியாவுக்கு கிடைக்கவுள்ளது என இஸ்ரோவின் மூத்த அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா
இந்தியா

By

Published : Nov 6, 2020, 6:27 PM IST

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இஓஎஸ்-01 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. -சி49 ராக்கெட் மூலம் நாளை மாலை 3 மணி 2 நிமிடத்தில் விண்ணில் செலுத்த உள்ளது.

இதனுடன் இணைந்து வணிக ரீதியாக 9 வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பபட உள்ளன. இ.ஓ.எஸ்- 01 செயற்கைக்கோள் புவி கண்காணிப்பு, விவசாயம், பேரிடர் மேலாண்மை, காடுகள் கண்காணிப்பு ஆகிய பணிகளையும் துல்லியமாக மேற்கொள்ளும். கரோனா பரவல் காரணமாக பார்வையாளர்கள் ராக்கெட் ஏவுதலை பார்வையிட அனுமதிக்கப்படமாட்டார்கள். இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ வலைதளப்பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த ராக்கெட் ஏவுதல் வெற்றிகரமாக முடிந்தால், 328 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திய பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும் என இஸ்ரோ மூத்த அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

1999இல்தான் முதன்முறையாக இந்தியா வெளிநாட்டு செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்புவதை தொடங்கியது. தற்போது, 20 ஆண்டுகளுக்குள் 319 வெளிநாட்டு செயற்கைக்கோளை வெற்றிகரமாக அனுப்பியுள்ளது.

2017இல் 104 செயற்கைகோள்களை விண்ணிற்கு அனுப்பியதன் மூலம், உலக சாதனை ஒன்றையும் இஸ்ரோ படைத்துள்ளது. அதில், 101 வெளிநாட்டு செயற்கைகோள்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் 26 நாடுகளின் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியதில் ரூ.1,245.17 கோடி இஸ்ரோவுக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details