டெல்லி: கடந்த 22ஆம் தேதி ஆப்கானிஸ்தானின், கிழக்கு பாக்டிகா மாகாணத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதில் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பலர் வீடுகளை இழந்து வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக இந்தியா 2 விமானங்களில் , 27 டன் அளவிலான நிவாரண மற்றும் மருத்துவப் பொருட்களை காபூலுக்கு அனுப்பி உள்ளது. கூடாரங்கள், தூங்கும் பைகள், போர்வைகள், தூங்கும் பாய்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.