டெல்லி :நாட்டில் கடந்த சில நாட்களாக கரோனா பரவல் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. 6 மாதங்களுக்கு பின் கடந்த இரண்டு நாட்களாக 6 ஆயிரத்திற்கு மேல் கரோனா பதிவாகி மீண்டும் உச்சம் தொட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6 ஆயிரத்து 50 பேர் கரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டு உள்ள அறிக்கையின்படி கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 194 ஆக அதிகரித்து உள்ளது. கரோனா பாதிப்புக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆக உள்ளது. ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 360 ஆயிரத்து 954 ஆக அதிகரித்து உள்ளது.
நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத் துறை அமைச்சர்கள், பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உயர்மட்ட ஆலோசனையில் நடத்தினார்.
இந்த கூட்டத்தில் நாட்டின் கொரோனா பரவல் நிலவரம் குறித்தும், பெருந்தொற்றை எதிர்கொள்வதற்கான தயார் நிலை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பரவலை கட்டுபடுத்த பரிசோதனைகளை அதிகப்படுத்துவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்ளை தீவிரப்படுத்துமாறும் மாநில சுகாதாரத் துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பரவலின் தீவிரத்தன்மை அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 733 பேர் கரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளதாகவும் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக கரோனா பரவல் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. தினசரி கரோனா பாதிப்பு 200 ஐ கடந்து தீவிரமாக பரவி வருகிறது. அதிகபட்சமாக சென்னையில் கரோனா எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாநில சுகாதரத்துறை தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.
இதையும் படிங்க :மது போதையில் எமர்ஜென்சி எக்சிட்டை திறக்க முயற்சி - நடுவானில் பயணியால் களேபரம்!