டெல்லி: நாடு முழுக்க கரோனா பெருந்தொற்று வைரஸிற்கு 15 லட்சத்து 50 ஆயிரத்து 377 பேர் சிகிச்சை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் லட்சத்து 71 ஆயிரத்து 202 பேருக்கு புதிதாக கரோனா பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையில், “கடந்த 241 நாள்களில் இல்லாத வகையில் நாட்டில் 2 லட்சத்து 71 ஆயிரத்து 202 பேர் கரோனா பெருந்தொற்று வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் 15 லட்சத்து 50 ஆயிரத்து 377 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தினந்தோறும் பாதிப்பு வீதம் 16.28 ஆக உள்ளது. வாராந்திர பாதிப்பு வீதம் 13.69 ஆக உள்ளது. இதுவரை 7 ஆயிரத்து 743 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.