டெல்லி:ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (ஜன.31) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்து 9 ஆயிரத்து 918 பேருக்கு பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது நேற்று முன்தினம் பாதிப்பை விட 24 ஆயிரத்து 363 குறைவாகும். கரோனா தொற்று விகிதம் 15.77 விழுக்காடாக உள்ளது.
கரோனா பாதிப்பிலிருந்து ஒரே நாளில் 2 லட்சத்து 62 ஆயிரத்து 628 பேர் குணமடைந்து வீடு திரும்பி நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 89 லட்சத்து 76 ஆயிரத்து 122 ஆக அதிகரித்துள்ளது. 18 லட்சத்து 31 ஆயிரத்து 268 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.