தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Coronavirus India update: இந்தியாவில் ஒரே நாளில் 6,822 பேருக்கு பாதிப்பு - தினசரி கோவிட் 19 பாதிப்பு

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 6,822 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில், 220 பேர் உயிரிழந்துள்ளனர்.

Covid cases
Covid cases

By

Published : Dec 7, 2021, 3:17 PM IST

கோவிட்-19 தினசரி நிலவரம் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் (டிச.6) ஆறாயிரத்து 822 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பாதிப்பு, உயிரிழப்பு நிலவரம்

இதனால், மொத்த பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை மூன்று கோடியே 46 லட்சத்து 48 ஆயிரத்து 383ஆக அதிகரித்துள்ளது. நேற்று (டிச.6) மட்டும் தொற்றால் 220 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை நான்கு லட்சத்து 73 ஆயிரத்து 757 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியே 40 லட்சத்து 79 ஆயிரத்து 612 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 95 ஆயிரத்து 14ஆக உள்ளது.

தடுப்பூசி திட்ட நிலவரம்

இதுவரை, மொத்தம் 129 கோடியே 19 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 80 கோடியே 54 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஒரு டோஸ் தடுப்பூசியும், 48 கோடிக்கும் மேற்பட்டோர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 79 லட்சத்ததுக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:நாகலாந்து துப்பாக்கிச்சூடு விவகாரத்தைக் கையிலெடுத்த மனித உரிமைகள் ஆணையம்

ABOUT THE AUTHOR

...view details