தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவிட்-19 நிலவரம்: இந்தியாவில் ஒரே நாளில் 62,714 பாதிப்பு - இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 62 ஆயிரத்து 714 நபர்களுக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 312 பேர் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர்.

COVID-19
COVID-19

By

Published : Mar 28, 2021, 12:30 PM IST

நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 62 ஆயிரத்து 714 நபர்களுக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 312 பேர் கரோனா பாதிப்புக் காரணமாக உயிரிழந்தனர்.

இந்தியாவில் கோவிட் - 19 நிலவரம் இந்தியாவில் இதுவரை, ஒரு கோடியே 19 லட்சத்து 71 ஆயிரத்து 642 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது நான்கு லட்சத்து 86 ஆயிரத்து 310 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 552 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.

பரிசோதனை, தடுப்பூசி நிலவரம்

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இன்று (மார்ச் 28) வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (மார்ச் 27) வரை நாடு முழுவதும் 24 கோடியே 09 லட்சத்து 50 ஆயிரத்து 842 நபர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 11 லட்சத்து 81 ஆயிரத்து 289 பேருக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 21 லட்சத்து 54 ஆயிரத்து 170 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை ஆறு கோடியே 02 லட்சத்து 69 ஆயிரத்து 782 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக பாதிப்புகள் ஏற்படும் மாநிலங்கள்

கடந்த 24 மணிநேரத்தில் மகாராஷ்டிராவில் 35 ஆயிரத்து 726 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்தபடியாக சத்தீஸ்கர், கர்நாடகா, பஞ்சாப், குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இதையும் படிங்க:வெற்றி வேல், வீர வேல் முழக்கமிட்டு தமிழ் மக்களைக் குறிவைக்கும் அமித்ஷா

ABOUT THE AUTHOR

...view details