தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒரே நாளில் 4 லட்சம் பேர் பாதிப்பு; 4,092 பேர் உயிரிழப்பு! - India reports 4,03,738 new #COVID19 cases

நாட்டில் நேற்று (மே.8) ஒரே நாளில் நான்கு லட்சத்து 3 ஆயிரத்து 738 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

COVID19 cases
கரோனா

By

Published : May 9, 2021, 10:53 AM IST

இந்தியாவில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நான்கு லட்சத்து 3 ஆயிரத்து 738 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 22 லட்சத்து 96 ஆயிரத்து 414ஆக அதிகரித்துள்ளது.

குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் அதிகளவிலான கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதேபோல், நேற்று (மே.8) கரோனாவால் பாதிக்கப்பட்டு 4,092 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 42 ஆயிரத்து 362 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியே 83 லட்சத்து 17 ஆயிரத்து 404 ஆக உள்ளது. தற்போது, 37 லட்சத்து 36 ஆயிரத்து 648 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தமாக 16 கோடியே 94 லட்சத்து 39 ஆயிரத்து 663 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

ABOUT THE AUTHOR

...view details