தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மளமளவென மீண்டும் உயரும் பாதிப்பு: மேலும் 1.84 லட்சம் பேருக்கு கரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனா தொற்று காரணமாக ஆயிரத்து 27 பேர் உயிரிழந்துள்ளனர். 82 ஆயிரத்து 339 பேர் கரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

கரோனா
கரோனா

By

Published : Apr 14, 2021, 12:19 PM IST

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 372 பேருக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆயிரத்து 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், நாடு முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 85ஆக உயர்ந்துள்ளது.

82 ஆயிரத்து 339 பேர் கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதுவரை நாட்டில் மொத்தம் ஒரு கோடியே 38 லட்சத்து 73 ஆயிரத்து 825 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், ஒரு கோடியே 23 லட்சத்து 36 ஆயிரத்து 36 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இதுவரை மொத்தம் 11 கோடியே 11 லட்சத்து 79 ஆயிரத்து 578 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தமிழ்ப் புத்தாண்டு: ஜில்லுடன் ஜோ பைடனின் மனம் குளிர்ந்த வாழ்த்து!

ABOUT THE AUTHOR

...view details