தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவில் ஒரே நாளில் 18,313 பேருக்கு கரோனா பாதிப்பு - ஒட்டுமொத்தமாக 4 கோடியே 39 லட்சத்து 38 ஆயிரத்து 764 பேர்

இந்தியாவில் நேற்று (ஜூலை 26) ஒரே நாளில் 18 ஆயிரத்து 313 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் ஒரே நாளில் 18,313 பேருக்கு கரோனா பாதிப்பு
இந்தியாவில் ஒரே நாளில் 18,313 பேருக்கு கரோனா பாதிப்பு

By

Published : Jul 27, 2022, 1:05 PM IST

டெல்லி: மத்திய சுகாதரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 18 ஆயிரத்து 313 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை ஒட்டுமொத்தமாக 4 கோடியே 39 லட்சத்து 38 ஆயிரத்து 764 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது நாடு முழுவதும் கரோனாவிற்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 45 ஆயிரத்து 26 ஆகும்.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 57 பேர் இறந்துள்ளனர். இதனால் இது வரை நாடு முழுவதும் 5 லட்சத்து 26 ஆயிரத்து 110 பேர் கரோனாவால் இறந்துள்ளதாக மத்திய சுகாதரத் துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று 87.36 கோடி கோவிட் பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆகஸ்ட் 7, 2020 அன்று 20 லட்சத்தை தாண்டியது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 23, 2020 இல் 30 லட்சத்தையும், செப்டம்பர் 5, 2020 இல் 40 லட்சத்தையும், செப்டம்பர் 16, 2020 இல் 50 லட்சத்தையும், செப்டம்பர் 28, 2020 அன்று 60 லட்சத்தையும் தாண்டி அதிகமாக தொடங்கியது.

இந்நிலையில் அக்டோபர் 11, 2020 அன்று 70 லட்சம், அக்டோபர் 29, 2020 அன்று 80 லட்சம், நவம்பர் 20, 2020 அன்று 90 லட்சம் என்று இருந்த தொற்று எண்ணிக்கை டிசம்பர் 19, 2020 அன்று ஒரு கோடியை எட்டியது. மே 4 அன்று நாடு இரண்டு கோடி பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது கடந்து சில மாதங்களாக கரோனா தொற்று அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மத்தியப்பிரதேசத்தில் உயரும் புலிகளின் உயிரிழப்பு - மறுக்கும் ம.பி. வனத்துறை அமைச்சர்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details