தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாட்டில் 1,660 பேருக்கு கரோனா பாதிப்பு! - தினசரி கோவிட் பாதிப்பு நிலவரம்

இந்தியாவில் புதிதாக 1,660 பேருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த ஒரு நாளில் 2,349 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

COVID-19 cases
COVID-19 cases

By

Published : Mar 26, 2022, 12:41 PM IST

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,660 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவர செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போதுவரை நாட்டில் 16 ஆயிரத்து 741 பேர் கரோனா சிகிச்சை எடுத்துவருகின்றனர்.

கடந்த ஒரு நாளில் 2,349 பேர் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 4,100 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இதில் பெரும்பாலானவை முன்பே உயிரிழந்தவர்களின் விவரத்தில் விட்டுப் போனவை ஆகும். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 5 லட்சத்து 20 ஆயிரத்து 855 ஆக உள்ளது.

மேலும், தினந்தோறும் கரோனா பரவல் விகிதம் 0.25 சதவீதம் ஆகவும், வாராந்திர பரவல் 0.29 சதவிகிதம் ஆகவும் காணப்படுகிறது. இதற்கிடையில் கடந்த 24 மணி நேரத்தில் 6 லட்சத்து 58 ஆயிரத்து 489 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 78.68 கோடி பேர் கரோனா பரிசோதனைக்கு தங்களை உட்படுத்தியுள்ளனர். இதற்கு மத்தியில் 12-14 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி அளிக்கும் திட்டம் மார்ச் 16ஆம் தேதி தொடங்கிவைக்கப்பட்டது. இந்த திட்டத்தில் இதுவரை ஒரு கோடியே ஏழு லட்சத்துக்கும் அதிகமான சிறார்களுக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஒரே ஆண்டில் 14 லட்சத்துக்கும் அதிகமான சைபர் தாக்குதல்- மாநிலங்களவையில் அமைச்சர் தகவல்

ABOUT THE AUTHOR

...view details