டெல்லி:இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 16,103 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 31 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். நாளொன்றுக்கு கூடுதலாக 2,143 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுவருகிறது.
மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,35,02,429ஆக அதிகரித்துள்ளது. மறுப்புறம் உயிரிழப்பு எண்ணிக்கை 5,25,199ஆக அதிகரித்துள்ளது. இதில் மகாராஷ்டிராவில் 1,47,934 பேரும், கேரளாவில் 70,037 பேரும், கர்நாடகாவில் 40,119 பேரும், தமிழ்நாட்டில் 38,026 பேரும், டெல்லியில் 26,266 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 23,540 பேரும், மேற்கு வங்கத்தில் 21, 222 பேரும் அடக்கம்.