இந்தியாவில் இதுவரை மொத்தம் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 862 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். கரோனாவிலிருந்து மேலும் 59 ஆயிரத்து 258 பேர் குணமடைந்துள்ள நிலையில், ஒன்பது லட்சத்து 10 ஆயிரத்து 319 பேர் தற்போது சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
நாட்டில் புதிய உச்சம் தொட்ட கரோனா
நாட்டில் மேலும் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 789 பேருக்கு புதிதாகக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 685 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரோனா
இதுவரை நாட்டில் ஒரு கோடியே 29 லட்சத்து 28 ஆயிரத்து 574 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு கோடியே 18 லட்சத்து 51 ஆயிரத்து 393 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை ஒன்பது கோடியே ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 673 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Apr 8, 2021, 11:23 AM IST