புதுடெல்லி:மத்திய சுகாதார அமைச்சகம் இன்று (ஏப்.13) கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,088 புதிய கரோனா நோய்ப்பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 10,870 ஆக உள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.03 விழுக்காடாகும்.
நாட்டில் தினசரி நோய்ப்பாதிப்பு விகிதம் 0.25 % ஆகவும், நோய்ப் பாதிப்பிலிருந்து குணமானவர்களின் விகிதம் தற்போது 98.76 %ஆகவும் உள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் நேற்று (ஏப்.12) இதுவரை மொத்தம் 4,25,05,410 பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின்கீழ், எவ்வளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.