இந்தியாவில் மேலும் ஒரு லட்சத்து மூன்றாயிரத்து 558 பேருக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 52 ஆயிரத்து 847 பேர் கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்துள்ள நிலையில், 478 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை நாட்டில் ஒரு கோடியே 25 லட்சத்து 89 ஆயிரத்து 67 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு கோடியே 16 லட்சத்து 82 ஆயிரத்து 136 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.