1988ஆம் ஆண்டு இதே நாளில் (நவ.15) பாலஸ்தீன தேசிய கவுன்சில் பாலஸ்தீனின் சுதந்திர பிரகடனத்தை வெளியிட்டது.
அந்த அறிவிப்பை அல்ஜீரியாவைச் சேர்ந்த அப்போதைய பாலஸ்தீனிய தலைவர் யாசர் அராபத் வெளியிட்டார். அதில் ஜெருசலேம் பாலஸ்தீனத்தின் தலைநகர் என்று குறிப்பிட்டார். உலகின் முதல் நாடாக இந்தியா இதனை அங்கீகரித்தது.
இதனை நினைவுகூரும் விதமாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ரியாத் அல் மாலிகிக்கும் பாலஸ்தீன அரசுக்கும் மக்களுக்கு பாலஸ்தீன சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாலஸ்தீனர்களின் அமைதி, அவர்களின் இறையாண்மை ஆகியவற்றிற்கு இந்தியா எப்போதும் ஆதரவாக இருக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.