கோவிட்-19 தினசரி நிலவரம் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் (டிச.1) ஒன்பதாயிரத்து 765 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பாதிப்பு, உயிரிழப்பு நிலவரம்
இதனால், மொத்த பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை மூன்று கோடியே 46 லட்சத்து ஆறாயிரத்து 541ஆக அதிகரித்துள்ளது. நேற்று (டிச.1) மட்டும் தொற்றால் 477 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை நான்கு லட்சத்து 69 ஆயிரத்து 724 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியே 40 லட்சத்து 37 ஆயிரத்து 054 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 99 ஆயிரத்து 763 ஆக உள்ளது.