தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Covid cases in India: நாட்டில் ஒரு லட்சத்து 79 ஆயிரத்தைக் கடந்த கரோனா பாதிப்பு - corona cases in india

Covid cases in India: கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், ஒரே நாள் கரோனா பாதிப்பாக ஒரு லட்சத்து 79 ஆயிரம் பதிவாகியுள்ளது.

corona
கரோனா

By

Published : Jan 10, 2022, 9:53 AM IST

Updated : Jan 10, 2022, 10:13 AM IST

டெல்லி: Covid cases in India: நாட்டில் ஒரே நாளில் ஒரு லட்சத்து 79 ஆயிரம் பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு ஏழு லட்சத்தைக் கடந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 146 பேர் உயிரிழந்துள்ளனர். ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,033 ஆக பதிவாகியுள்ளது.

தினசரி பாதிப்பு உயர்வு

மேலும், தினசரி தொற்று பாதிப்பின் விழுக்காடு 13.29 ஆக உயர்ந்துள்ளது. மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்களில் தினசரி பாதிப்பு கணிசமான அளவு உயர்ந்துள்ளது.

புதிய கரோனா பாதிப்பு

ஜனவரி நான்காம் தேதி முதல் எட்டாம் தேதிக்குள் 86 ஆயிரம் புதிய கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளன.

அவற்றில் டெல்லியில் 68 ஆயிரம் பேருக்கும், பெங்களூருவில் 24 ஆயிரம் பேருக்கும், சென்னையில் 17 ஆயிரத்து 247 பேருக்கும் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வடசென்னையில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா

Last Updated : Jan 10, 2022, 10:13 AM IST

ABOUT THE AUTHOR

...view details