தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவிட்-19 நிலவரம்: ஒரே நாளில் 9,102 பேருக்கு பாதிப்பு - கரோனா பாதிப்பு எண்ணிக்கை

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 9 ஆயிரத்து 102 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி 117 பேர் உயிரிழந்தனர்.

கரோனா
COVID-19 cases

By

Published : Jan 26, 2021, 3:19 PM IST

நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 9 ஆயிரத்து 102 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 117 பேர் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர்.

கரோனா பாதிப்பு நிலவரம்

இந்தியாவில், இதுவரை ஒரு கோடியே ஆறு லட்சத்து 76 ஆயிரத்து 838 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 587 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.

பரிசோதனை நிலவரம்

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இன்று (ஜன. 26) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 7 லட்சத்து 25 ஆயிரத்து 577 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை மொத்தம் 19 கோடியே 30 லட்சத்து 62 ஆயிரத்து 694 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:டெல்லியில் விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

ABOUT THE AUTHOR

...view details