நாட்டின் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 44 ஆயிரத்து 111 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கோவிட்-19 நிலவரம்
நாட்டில் இதுவரை, மூன்று கோடியே ஐந்து லட்சத்து இரண்டாயிரத்து 362 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நான்கு லட்சத்து 95 ஆயிரத்து 533 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
கடந்த 24 மணிநேரத்தில் 738 பேர் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ள நிலையில், நாட்டின் மொத்த இறப்பு எண்ணிக்கை நான்கு லட்சத்து ஓராயிரத்து 50ஆக அதிகரித்துள்ளது.