தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

India corona cases: நாட்டில் புதிதாக 2.38 லட்சம் பேருக்கு கோவிட் பாதிப்பு - இந்தியாவில் ஒமைக்ரான் பரவல்

நாட்டில் புதிதாக இரண்டு லட்சத்து 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Covid-19 cases
Covid-19 cases

By

Published : Jan 18, 2022, 9:56 AM IST

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக இரண்டு லட்சத்து 38 ஆயிரத்து 18 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

நேற்றை ஒப்பிடும் போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரம் குறைந்துள்ளது. நாட்டில் இதுவரை மொத்தம் எட்டாயிரத்து 897 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கரோனாவால் 310 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு நான்கு லட்சத்து 86 ஆயிரத்து 761 ஆக உள்ளது. நாட்டில் தற்போது 17 லட்சத்து 36 ஆயிரத்து 628 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை மூன்று கோடியே 53 லட்சத்து 94 ஆயிரத்து 882 ஆக உள்ளது. இதுவரை 158.04 கோடி பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அதில் நேற்று (ஜன 18) மட்டும் 79 லட்சத்து 91 ஆயிரத்து 230 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதையும் படிங்க:வருங்கால மருமகனுக்கு பிரம்மாண்ட விருந்து; 365 வகையான உணவு பரிமாறி அசத்தல்

ABOUT THE AUTHOR

...view details