இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16 ஆயிரத்து 51 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது, 8 லட்சத்து 31 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் தினசரி கோவிட் பாதிப்பு 15 நாள்களுக்கு மேலாக ஒரு லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. இதன் மூலம் மூன்றாம் அலை மற்றும் ஒமைக்ரான் பரவல் ஓய்ந்துள்ளது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு வரை தினசரி பாதிப்பு இரண்டு லட்சத்துக்கும் மேல் பதிவாகிவந்த நிலையில், அன்மை நாள்களில் தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்துவருகிறது.நேற்று, ஒரே நாளில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 206ஆக பதிவாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு ஐந்து லட்சத்து 12 ஆயிரத்து 109 ஆக உள்ளது. நாட்டில் தற்போது இரண்டு லட்சத்து இரண்டாயிரத்து ஆயிரத்து 131 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை நான்கு கோடியே 21 லட்சத்து 24 ஆயிரத்து 284 ஆக உள்ளது. இதுவரை மொத்தம் 175.46 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. அதில் நேற்று (பிப்.20) மட்டும் ஏழு லட்சத்து 706 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை 96 கோடியே 27 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஒரு டோஸ் தடுப்பூசியும், 77 கோடியே 34 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். சுமார் ஒரு கோடியே 79 லட்சம் பேர் முன்னெச்சரிக்கை டோஸ்சும் செலுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க:மேடையில் பாஜக நிர்வாகி காலில் விழுந்த மோடி - வைரலாகும் காணொலி!