PAFI India என்ற அமைப்பு நடத்திய கருத்தரங்கில் பங்கேற்ற அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நாட்டின் பொருளாதார நிலை குறித்து உரையாற்றினர். அவர் பேசுகையில், " நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகமெடுத்துவருகிறது.
கோவிட்-19 முந்தைய காலத்தை ஒப்பிடும் போது நாட்டின் பெட்ரோல் நுகர்வு 16 விழுக்காடு அதிகமாகவும், டீசல் நுகர்வு 12 விழுக்காடு அதிகமாகவும் உள்ளது. இது பொருளாதார நடவடிக்கை சீரடைந்துவருவதை குறிக்கிறது.
2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப்பின் நாட்டின் பங்குச்சந்தைகள் 250 விழுக்காடு வளர்ச்சியை கண்டுள்ளன. ஏர் இந்தியா விற்பனை என்பது சந்தையில் நல்ல மாற்றத்தை தந்துள்ளது. பாரத் பெட்ரோலியத்தை தனியார் மையமாக்கும் நடவடிக்கை சரியான திசையில் செல்கிறது.
இந்த நல்ல மாற்றங்களை பார்க்கையில் ஐந்து லட்சம் கோடி டாலர் இலக்கை நோக்கி இந்தியப் பொருளாதாரம் 2024-25ஆம் ஆண்டு அடையும்" என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:TOP 10 HIGHLIGHTS: 100 கோடி கோவிட்-19 தடுப்பூசி டோஸ் மைல்கல்