பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள நித்தியானந்தா, இந்தியாவிலிருந்து தப்பியோடி ஆஸ்திரேலியா அருகே தனித்தீவு ஒன்றை வாங்கி அங்கு குடியேறியதாகக் கூறப்படுகிறது.
பாலியல் வல்லுறவு வழக்கில் அகமதாபாத் காவல் துறையினரால் தேடப்படும் நித்தியானந்தா, 2019 அக்டோபர் மாதம் முதல் தலைமறைவானார்.
பின்னர், திடீரென யூ-ட்யூபில் தோன்றிய அவர், கைலாசா என்ற நாட்டை தான் உருவாக்கியிருப்பதாகவும், தனிநாடு தகுதிக்கோரி ஐநாவிடம் விண்ணப்பித்து இருப்பதாகவும் கூறினார்.
நித்யானந்தாவுடன் கைலாசா நாடு, சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது. அந்தத் தீவுக்கு கைலாசா என அறிவித்து, அதன் தலைவராகத் தன்னை பிரகடனப்படுத்திக்கொண்டார் நித்தியானந்தா.
கைலாசா நாட்டிற்கென்று பிரத்யேகமாக வலைதளம் ஒன்றையும் உருவாக்கியிருக்கிறார் நித்தி. எல்லாவற்றுக்கும் மேலாக, கைலாசாவில் ரிசர்வ் வங்கியைத் திறந்திருப்பதாகவும், பணம் என்ற பெயரில் சில தங்க நாணயங்களையும் வெளியிட்டு அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.
அவ்வப்போது, நித்தியானந்தாவால் வெளியிடப்படும் அறிவிப்புகள் ஊடகங்களில் செய்தியாவது உண்டு. அதுபோல, ஏப்ரல் 19ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
இந்தியர்களுக்கு கைலாசாவில் அனுமதியில்லை - நித்தியானந்தா அறிவிப்பு கரோனா இரண்டாவது அலை இந்தியாவில் வேகமெடுத்துள்ளதால், இந்தியாவிலிருந்து வரும் பக்தர்கள் கைலாசாவிற்குள் நுழைய அனுமதி இல்லை எனவும், ஐரோப்பிய யூனியன், மலேசியா, பிரேசில் என கரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளிலிருந்து பக்தர்கள் கைலாசா நாட்டிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:வழிபாட்டுத் தலங்களை குறைந்தது இரண்டு மணி நேரம் திறக்க மத தலைவர்கள் கோரிக்கை