தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் இந்தியா-பாகிஸ்தான் போர் வெற்றி தின கொண்டாட்டம் - புதுச்சேரி ரங்கசாமி

புதுச்சேரியில் இந்தியா-பாகிஸ்தான் போரில், இந்தியாவின் வெற்றி தினத்தை முன்னிட்டு, போர் வீரர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.

புதுச்சேரியில் இந்தியா-பாகிஸ்தான் போர் வெற்றி தின கொண்டாட்டம்
புதுச்சேரியில் இந்தியா-பாகிஸ்தான் போர் வெற்றி தின கொண்டாட்டம்

By

Published : Dec 16, 2022, 12:51 PM IST

இந்தியா-பாகிஸ்தான் போர் வெற்றி தின கொண்டாட்டம்

புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் இந்தியா - பாகிஸ்தான் போர் வெற்றி தினம் இன்று கொண்டாடப்பட்டது. கடற்கரை சாலையில் உள்ள போர் வீரர் நினைவிடத்தில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய் சரவணன், சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோர் பங்கேற்று மரியாதை செலுத்தினார்கள். முப்படை நலத்துறையினரும் காவல் துறையினரும் மரியாதை செலுத்தினார்கள்.

மேலும், ‘கடந்த 15 ஆண்டுகளாக இந்தியா- பாகிஸ்தான் போர் வெற்றி தினத்தை கொண்டாட வேண்டும் என்று கோரிக்கையை வைத்து வந்தோம். அதற்கு நடவடிக்கை எடுத்து இவ்வாண்டு முதல் முதல் முறையாக வெற்றி விழாவை கொண்டாடும் முதலமைச்சருக்கும் புதுச்சேரி அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’ என நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:10 years of Nirbhaya: பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுங்கள்.. நாடாளுமன்றத்துக்கு மகளிர் ஆணையம் கடிதம்..

ABOUT THE AUTHOR

...view details