டெல்லி:கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையிலாக தூதரக ரீதியிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி ஆண்டின் தொடக்க நாள் மற்றும், ஜூலை மாதத்தின் முதல் நாள் ஆகிய தேதிகளில் இருநாட்டு சிறைகளில் உள்ளவர்களின் பட்டியலை பகிர்ந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட மீனவர்கள், அத்துமீறி நாட்டிற்குள் நுழைந்ததாக கைது செய்யப்பட்டவர்களின் பட்டியல் பகிரப்பட்டு கைதிகள் பரிமாற்ற முறை மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் சிறையில் கைதிகளாக உள்ள இந்திய குடிமக்கள், காணாமல் போன பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் மீனவர்கள் ஆகியோர் அடங்கிய பட்டியலை விரைந்து அளிக்குமாறு பாகிஸ்தான் வெளியுறவுத் துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.