தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தடுப்பூசி திட்டத்தில் அமெரிக்காவை முந்திய இந்தியா! - இந்தியாவில் கரோனா நிலவரம்

கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தில் அமெரிக்காவை விட அதிக மக்களுக்கு இந்தியா தடுப்பூசி செலுத்தியுள்ளது என நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் வி.கே பால் தெரிவித்துள்ளார்.

NITI Aayog Dr VK Paul
NITI Aayog Dr VK Paul

By

Published : Jun 4, 2021, 9:56 PM IST

இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசி திட்ட நிலவரம் குறித்து நிதி ஆயோக் அமைப்பின் சுகாதாரத்துறை பிரிவு உறுப்பினர் வி.கே பால் செய்தியாளர் சந்திப்பு மேற்கொண்டார். அவர் பேசியதாவது, "தற்போதையை நிலவரப்படி நாட்டின் 17.2 கோடி மக்கள் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்திக்கொண்டுள்ளனர்.

இது அமெரிக்காவின் எண்ணிக்கையை விட அதிகம். நாட்டின் பெருவாரியான குடிமக்களுக்கு தடுப்பூசி செலுத்த நீண்ட காலம் பிடிக்கும். கோவிட்-19 தொற்று 2021 ஜனவரி மாத காலத்தில் குறைந்துவிட்ட நிலையில் எதிர்பாராத விதமாக இரண்டாம் அலை தாக்கியது.

எனவே, தடுப்பூசி திட்டம் முழுமையடையும் வரையில் அனைவரும் கவனத்துடன் செயல்பட வேண்டும். 60 வயதுக்கும் மேற்பட்ட நபர்களில் 43 விழுக்காட்டினரும், 45 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 37 விழுக்காட்டினரும் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்" என்றார்.

இதையும் படிங்க:'நாட்டில் இரண்டாம் அலை அடங்கிவருகிறது' - ஒன்றிய அரசு

ABOUT THE AUTHOR

...view details