மும்பை:மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகராஜ் ரயில் நிலையத்தில் மும்பை-சோலாப்பூர் மற்றும் மும்பை-சாய்நகர் ஷீரடி வழித்தடங்களில் 2 வந்தே பாரத் ரயில் சேவையை இன்று (பிப். 10) பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மும்பை-சாய்நகர் ரயில், சோலாப்பூரில் உள்ள சித்தேஷ்வர், அக்கல்கோட், துல்ஜாபூர், பந்தர்பூர் மற்றும் புனே அருகே உள்ள முக்கியமான புனித தலங்களுக்கு இடையேயான பயணித்தை அதிகரிக்கும் என்றும் மும்பை-சாய்நகர் ஷீரடி ரயில் நாசிக், திரிம்பகேஷ்வர், சாய்நகர் ஷிர்டி, ஷானி சிங்கனாபூர் போன்ற புனித தலங்களுக்கு எளிதாக பயணிக்க உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின்போது பேசிய பிரதமர் மோடி, 21ஆம் நூற்றாண்டில் பொதுப் போக்குவரத்து முறையை விரைவாக மேம்படுத்த வேண்டும். பொதுப் போக்குவரத்து அமைப்பை எவ்வளவு விரைவாக நவீனமாக மாற்றுகிறோமோ அவ்வளவு விரைவாக மக்களின் வாழ்க்கை எளிதாக மாறும். குறிப்பாக நடுத்தர மக்களின் வாழ்க்கை முறையில் மாற்றத்தை கொண்டுவரும்.