புது டெல்லி: பல உயிர்களைப் பணயம் வைத்து பிரதமர் நரேந்திர மோடியின் பிம்பத்தைக் காப்பாற்ற ஒன்றிய அரசு தொடர்ந்து முயற்சித்து வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
கரோனா இரண்டாவது அலையிலிருந்து இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் மீண்டெழுந்து வரும் நிலையில், இது குறித்து ட்வீட் செய்துள்ள ராகுல் காந்தி, "இந்தியாவுக்குத் தேவையானது விரைவான, முழுமையான தடுப்பூசி செலுத்துதல். மோடி அரசாங்கத்தின் செயலற்ற தன்மையால் ஏற்பட்டுள்ள தடுப்பூசி தட்டுப்பாட்டை மறைக்க, பாஜக வழக்கமாகக் கூறும் எதுகை மோனைகள் நிரம்பிய முழக்கங்கள் அல்ல" என ட்வீட் செய்துள்ளார்.