இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 84 ஆயிரத்து 332 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை இரண்டு கோடியே 93 லட்சத்து 59 ஆயிரத்து 155ஆக உள்ளது.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அதிகளவில் கரோனா தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
குறிப்பாக தமிழ்நாட்டில் நேற்று (ஜுன் 11) ஒரேநாளில் 15 ஆயிரத்து 759 பேருக்குத் தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மற்ற மாநிலங்களைவிட அதிகமாகும். அடுத்தபடியாக கேரள மாநிலம் உள்ளது. அங்கு, 14 ஆயிரத்து 233 பேருக்குத் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
நேற்று (ஜுன் 11) மட்டும் 4,002 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை மூன்று லட்சத்து 67 ஆயிரத்து 81ஆக உயர்ந்துள்ளது.
தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை இரண்டு கோடியே 79 லட்சத்து 11 ஆயிரத்து 384ஆக உள்ளது. தற்போது 10 லட்சத்து 80 ஆயிரத்து 690 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்
இதுவரை, மொத்தமாக 24 கோடியே 96 லட்சத்து 304 பேருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:'தென் மாநிலங்களுக்கு 1,48,000 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் விநியோகம்!'