இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6 ஆயிரத்து 561 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது, 8 லட்சத்து 82 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
நேற்று, ஒரே நாளில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 142ஆக பதிவாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு ஐந்து லட்சத்து 14 ஆயிரத்து 388 ஆக உள்ளது. நாட்டில் தற்போது 77 ஆயிரத்து 152 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை நான்கு கோடியே 23 லட்சத்து 53 ஆயிரத்து 620 ஆக உள்ளது. இதுவரை மொத்தம் 178 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது.