டெல்லி:இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 921 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி மொத்தமாக பாதிக்கப்படோர் எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 477 ஆக அதிகரித்துள்ளது.
மருத்துவமனையில் 63 ஆயிரத்து 878 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 289 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 14 ஆயிரத்து 878ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 178 கோடியே 80 லட்சத்து 13 ஆயிரத்து 60 பேருக்கு கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.